நேற்று ரஜினியுடன் சந்திப்பு; இன்று விருப்ப மனு : கமலின் அடுத்தடுத்த மூவ்!

by Lifestyle Editor
0 comment

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக சார்பில் விருப்பமனுத்தாக்கல் செய்வது வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். நாகர்கோவில் மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று முதல் விருப்பமனு பெறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு ஒருமுறை விருப்ப மனு தாக்கல் செய்ய ரூ. 25, 000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த கமல் ஹாசன் அவரிடம் தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக தெரிகிறது. அத்துடன் ரஜினியின் உடல்நலம் குறித்தும் அவர் விசாரித்து சென்றதாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment