ஜேர்மனி அதிபரை ஒரு நிமிடம் பதற வைத்த முகக்கவசம்! நாடாளுமன்ற அவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ

by Lifestyle Editor
0 comment

ஜேர்மன் அதிபர் ஏஞ்சல மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து பரவியதால், உலகில் பல்வேறு நாடுகளில் பரவியது. பல லட்சம் உயிர்கள் பலியானது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமானது. இதனால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளிக்கும் வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேபோல, உலக நாட்டின் தலைவர்களும் முகக் கவசத்துடனேயே பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல், நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார்.

திடீரென முகக்கவசம் அணியாதது குறித்து நினைவுக்கு வந்த அவர், பதறிப் போய் முகக்கவசத்தை வாங்கி அணிகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Related Posts

Leave a Comment