தமிழகத்தின் கடனை அதிகரித்ததுதான் முதல்வரின் சாதனை- ஸ்டாலின்

by Lifestyle Editor
0 comment

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகத்தின் கடனை அதிகரித்தது தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை. தமிழகத்தின் கடனை ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் தொகை வேகமாக அதிகரித்துள்ளது, தமிழகத்தின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடன் வாங்கிய தொகையை கொண்டு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கப்படவில்லை. புதிய வேலை வாய்ப்புகளை அதிமுக அரசு உருவாக்கவில்லை. என்.எல்.சி., ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. மத்திய அரசு பணிகளில் 90 சதவீதத்தினர் வடமாநிலத்தவர்களாகவே உள்ளனர். திமுக ஆட்சியில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். திமுக ஆட்சிக்கூட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” எனக் கூறினார்.

Related Posts

Leave a Comment