1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் போதும்.. உங்கள் வீட்டு செடி அசுர வளர்ச்சியை எட்டுமாம்

by Lifestyle Editor
0 comment

எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு செடி வகையை நாம் வளர்த்து வருகிறோம். சிலர் பூச்செடிகளும், சிலர் காய், கனி செடிகளும், சிலர் அனைத்துமே சேர்த்தும் வளர்ப்பார்கள்.

முதன் முதலாக செடி வளர்க்க விரும்புபவர்களும் ரோஜா செடியை விரும்பி தேர்ந்தெடுப்பார்கள். கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய் என்று காய்கறி வகைகளும் செழிப்பாக வளர மண்ணின் வளம் சிறப்பானதாக அமைய வேண்டும்.

நீங்கள் சாதாரண மண் எடுத்தாலும் அதற்குப் பிறகு நீங்கள் கொடுக்கப்படும் உரமானது மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.

இதை ஒரு டம்ளர் ரேஷன் அரிசியில் நாம் செய்ய முடியும். அது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்…

ரேஷன் அரிசி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் கற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் அதனை 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை கழுவ வேண்டிய அவசியமில்லை.

பச்சரிசி, புழுங்கல் அரிசி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு நாள் வரை அப்படியே விட்டு வைத்து விடுங்கள்.

பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து பார்த்தால் தண்ணீர் முழுவதும் அரிசி உறிஞ்சிக் கொண்டு ஒரு டம்ளராக குறைந்திருக்கும். இந்த தண்ணீர் தான் நமக்கு இப்பொழுது தேவை.

அரிசியைக் கழுவிய தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்வதாக இருக்கும். இதனால் அம்மண்ணில் வளரக்கூடிய செடிகள் செழிப்பாக வளரும்.

நிறைய பூக்களும், காய்கறிகளும் நோய் தாக்குதல் இன்றி பூத்துக் குலுங்கும். அரிசியை தனியாக பிரித்து காய வைத்து பறவைகளுக்கு உணவாக கொடுத்து விடுங்கள்.

தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீருடன் மூன்று டம்ளர் அளவிற்கு பால் சேர்க்க வேண்டும். பால் காய்ச்சப்படாத பசும்பால் ஆக இருக்க வேண்டும்.

அதிகம் கொழுப்பில்லாத விலை மலிவு உள்ள பாலை வாங்கினால் போதுமானது. இந்தப் பாலை 3 டம்ளர் அளவிற்கு அரிசி தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை அப்படியே மூன்று நாட்கள் வரை தனியாக ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு அதில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி லாக்டோஸ் சத்து கிடைக்கும்.

இது மண் வளத்தை அதிகரித்து செடிகளுக்கு செழிப்பை கொடுக்கக் கூடியது ஆகும்.

மேலே இருக்கும் ஏடு போன்ற கொழுப்பு படிமங்களை எடுத்து தூக்கி போட்டு விடுங்கள். கீழ் இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரில் 10 ml வரை சுமார் 2 லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்களுடைய பூக்கள், மற்றும் காய்கறி செடிகளுக்கு தெளித்து வர செடிகள் கொத்துக் கொத்தாக பூக்களையும், காய்கறிகளையும் உங்களுக்கு கொடுக்கும்.

இலை அழுகல் போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்து விரைவாக செடிகளையும் வளர செய்யும்.

மேலும், 10 நாட்கள் வரை இந்த தண்ணீரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம். இன்னும் அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டுமெனில் சிறிதளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

ஆறு மாதம் வரை அப்படியே கெட்டுப் போகாமல் இருக்கும். தேவையான பொழுது செடிகளுக்கு ஊற்றி பயன் பெறலாம்.

Related Posts

Leave a Comment