தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழும் நடிகர் சிம்பு தனது திருமணத்திற்காக பரிகாரம் செய்துள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சையில் சிக்கிவரும் இவர், ஆரம்பத்தில் ரஜினி மகளை காதலித்து வந்தார். பின்பு நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து நடிகைகளையும் காதலித்து வந்தார்.
ஆனால் இவரது காதல் அனைத்து நேரங்களிலும் தோல்வியில் முடிந்துள்ளது. ரசிகர்கள் சிம்புவின் திருமணம் எப்போது என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
திருமணம் குறித்து அவரது தந்தை டி.ஆர் கூறுகையில், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு, நாயுடன் பேசிய காணொளி தீயாய் பரவியது. இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார்.
அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.
.@SilambarasanTR_ in Varanasi #STR pic.twitter.com/lPnAXn33Hv
— Indian Spice (@spiceofi) February 20, 2021