மதுரையில் பாஜக நடத்தும் ரத யாத்திரை

by Lifestyle Editor
0 comment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாடெங்கிலும் நிதி வசூலிக்கப்பட்டு வருகின்றன. ராமருக்காக வசூல் செய்யப்பட்டும் இந்த வசூல் பணத்திலும் குடித்து விட்டு கூத்தடிப்பதாகவும், ஆட்டைய போடுவதாகவும் ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ராமர்கோவில் கட்டுவதற்காக மதுரையில் ரதயாத்திரை நடத்தி நிதி வசூலிக்க பாஜகவினர் முடிவு செய்தனர். மதுரையில் உள்ள100 வார்டுகளிலும் ரதயாத்திரை வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்க வேண்டுமென்று திலகர் திடல் காவல் ஆணையரிடம் மனு கொடுத்தார் செல்வகுமார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டார்.

கொரோனா ஊரடங்கில் பல அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி தரப்படும் நிலையில் ரதயாத்திரைக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என்று கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குதொடர்ந்தார் செல்வகுமார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா, ’ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளன. ரத யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று’வாதத்தினை ஏற்று, மதுரையில் ரத யாத்திரை தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தார்.

Related Posts

Leave a Comment