உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை வேண்டுமா? அப்ப இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க..

by News Editor
0 comment

ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்க நல்ல தீர்வு கிடைக்கும்.

சுப்ரமணிய சுவாமி படத்தை வீட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுப்ரமணிய சுவாமி திருக்கோலத்தில் அமைந்திருக்கும் முருகன் படம் மிகவும் விசேஷமானது. இந்த கோலத்தில் முருகரை வணங்குபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும், சாதனை புரிய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் வீட்டில் சுப்ரமணிய சுவாமி படத்தை கட்டாயம் வாங்கி வையுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் இந்த படத்தில் மலர் சாற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வையுங்கள். அவர்களுடைய வெற்றிக்கு இந்த வழிபாடு சிறந்ததாக இருக்கும்.

இந்த சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பின்னர் சுப்ரமணிய சுவாமி படத்தின் முன்பு நின்று கொண்டே 108 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது போல் தினமும் செய்து வர நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும்.

ராஜராஜஸகோத் பூதம்!
ராஜீவாயத லோசனம்!
ரதீசகோடி ஸௌந்தர்யம்!
தேஹிமே விபுலாம் ச்ரியம்!!

நம்பிக்கையுடன் முருகப்பெருமானை வணங்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு இது போல் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை அமையும். நமக்கு எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் தெய்வத்தின் அருள் இன்றி எதையுமே சாதிக்க இயலாது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த மந்திரத்தை உச்சரித்து முருகனின் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பின்னர் வெளியில் செல்லுங்கள். செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்

Related Posts

Leave a Comment