தொப்புள் கொடியை இழுத்து தரையில் அடித்து குழந்தையை கொலை செய்த தந்தை… கணவரிடம் நம்பி கொடுத்த தாய் கதறும் அவலம்

by News Editor
0 comment

பிறந்த குழந்தை தனது ஜாடையில் இல்லை என்பதால் தந்தையே அதனைக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சாக்காங்குடி என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராஜீவ், சிவரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு ஆசையுடன் மருத்துவமனைக்கு பார்க்க வந்த ராஜீவ் குழந்தை தன்னுடைய சாயலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், மனைவியிடம் கேட்டுள்ளார்.

கணவரின் கேள்வியை காதில் கேட்ட சிவரஞ்சினியும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். பின்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சிவரஞ்சனி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

கோபத்தினை எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளார் ராஜீவ். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார் சிவரஞ்சனி. அப்போது குழந்தையை கொஞ்ச நேரம் தான் வைத்திருப்பதாக சொல்லி கேட்டு வாங்கியுள்ளார் ராஜீவ்.

கணவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு சிவரஞ்சனியும் தூங்க சென்றுள்ளார். அப்பொழுது லைட்டை ஆப் செய்த ராஜீவ், குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்துள்ளார்.

அத்துடன் அந்த பிஞ்சுவின் கழுத்தையும் நெரித்து கொன்றே விட்டார். கொஞ்ச நேம் கழித்து, கண்விழித்த சிவரஞ்சனி, குழந்தை பேச்சுமூச்சில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ந்து போய், அலறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

குழந்தையைக் கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment