சூரிய பகவான் எப்போது பிறந்தார்-ன்னு தெரியுமா?

by News Editor
0 comment

மாசி மாதத்தில் முதலில் நினைவிற்கு வருவது ரச சப்தமி அல்லது சூரிய ஜெயந்தி. இது இந்து நாட்காட்டியில் மிகவும் முக்கியமான புனித நாட்களுள் ஒன்றாகும். இந்நாள் சூரிய பகவான் தோன்ற தினத்தைக் குறிக்கிறது. மேலும் இந்நாள் சூரியன் வடக்கு நோக்கி திரும்புவதையும் குறிக்கிறது. அதோடு இது ஏழு குதிரைகளால் பூட்டப்பட்ட ரதம் அல்லது தேரையும் குறிக்கிறது. இந்த ஆண்டு ரத சப்தமி தினம் கிரிகோரியன் நாட்காட்டியின் படி பிப்ரவரி 19 அன்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் ரத சப்தமி மாசி மாதம் சுக்ல பட்சத்தின் ஏழாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் சூரிய பகவானை சிறப்பாக வழிபடுவார்கள்.

சூரிய பகவானுக்குரிய திருவிழா என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து சூரிய பகவானுக்குரிய கோவில்களிலும் இந்நாள் மிகவும் ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் சூரிய பகவானின் திருவிழாவான ரத சப்தமி அல்லது சூரிய ஜெயந்தி 2021 பிப்ரவரி 19, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. * ரத சப்தமியில் குளிப்பதற்கான நல்ல முகூர்த்தம் அதிகாலை 05:14 முதல் 06:56 வரை (காலம்: 01 மணி 42 நிமிடங்கள்). *

சப்தமியில் சூரியனை காண வேண்டிய நேரம் – காலை 6:56 மணி ரத சப்தமி 2021 திதி * சப்தமி திதி தொடங்கும் தேதி – 18 பிப்ரவரி 2021, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் * சப்தமி திதி முடியும் தேதி – 19 பிப்ரவரி 2021, வெள்ளிக்கிழமை காலை 10:58 மணி வரை ரத சப்தமியின் முக்கியத்துவம் உலகிலேயே கண்ணுக்கு தெரிந்த ஒரே கடவுள் என்றால் அது சூரிய பகவான் தான். அதோடு சூரியன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது. வழக்கமாக, சூரிய பகவானின் தேரை இயக்கும் ஏழு குதிரைகள் வானவில்லின் ஏழு நிறங்களை மட்டுமின்றி, வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கின்றன.

மறுபுறம், தேரின் பன்னிரண்டு சக்கரங்கள் முப்பது டிகிரி இடைவெளியில் இருக்கும் பன்னிரண்டு இராசிகளை குறிக்கின்றன. சூரிய பகவானின் தேர் அவரது சகோதரர் அருணாவால் இயக்கப்படுகிறது மற்றும் ரத சப்தமி திருவிழாவானது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. மொத்தத்தில் இந்த நாள் பருவத்தின் மாற்றத்தைக் குறிக்கிறது. முக்கியமாக இது விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்வதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ரத சப்தமியில் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் தங்களின் பாவங்களில் இருந்து விடுபட சூரிய உதயத்திற்கு முன் குளியலை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அதன்படி நர்மதா, கங்கை, யமுனா, தபதி போன்ற புனித நதிகளின் கரைகளில் வாழும் மக்கள், அந்த புனித நதிகளில் குளிப்பது நல்லது. குளித்த பின், சூரிய பகவானுக்கு நீரை வழங்குவார்கள். அதோடு சூரிய உதயத்திற்கு முன் குளிப்பது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பெற உதவும். தானம் செய்ய விரும்புவர்கள் வேண்டுமானால் இந்நாளில் இல்லாதவர்களுக்கு உணவு, பணம் உடை போன்றவற்றையும் வழங்கலாம்.

ரத சப்தமி அன்று குளிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் ”

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி ! தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய !”

ரத சப்தமியில் குளிக்கும் போது செய்ய வேண்டியவை

ரச சப்தமி நாளில் காலையில் எழுந்ததும் குளிக்கும் போது சூரிய பகவானுக்கு பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எழுத்துக் கொண்டு, அதன் மேல் அட்சதை மற்றும் எள்ளு விதைகளை வைக்க வேண்டும். ஆண்கள் குளிப்பதாக இருந்தால் அதனுடன் விபூதியையும், பெண்கள் குளிப்பதாக இருந்தால், அதனுடன் மஞ்சள் தூளையும் வைக்க வேண்டும். பின் அந்த இலைகளை தலையின் மீது வைத்து, நீரை ஊற்றி குளிக்க வேண்டும். ரத சப்தமி அன்று செய்யப்படும் பூஜை சடங்குகள் காலையில் குளித்த பின், சூரிய ஒளி படும் இடத்தில் சூரிய ரதத்துடனான சூரிய கோலமிட்டு, பின் வண்ண மலர்களால் அலங்கரித்து, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து, அதோடு நிவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், உளுந்து வடையும் செய்து படைத்து, சூரிய வழிபாட்டிற்குரிய மந்திரத்தை சொல்லி, பூஜை செய்ய வேண்டும்.

சூரிய வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா” –

இந்த மந்திரத்தை தினமும் 3 முறை கூறி சூரிய பகவானை வணங்க வேண்டும். சூரிய காயத்ரி மந்திரம் 1 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் சூரிய காயத்ரி மந்திரம் 2 ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Related Posts

Leave a Comment