மூத்த காங்கிரஸ் தலைவரின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சியான செயல்

by News Editor
0 comment

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைந்த சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று இறுதி மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.

மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடன் நட்பில் இருந்தவர் தான் சதீஷ் சர்மா. இவர் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்பதாகவும் ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவராக இருந்து வந்தார்.

சர்மாவுக்கு புற்றுநோய் இருந்ததால் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கோவாவில் கடந்த 17ம் தேதி அவருக்கு உடல்நல குறைவு காரணமாக சதிஷ் சர்மா மரணமடைந்தார்.

இதனையடுத்து இவரது உடல் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் மற்ற பிற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இறுதி சடங்கு நடைபெற்ற பொழுது மறைந்த சதிஷ் சர்மா அவர்களின் உடலை ராகுல்காந்தி சுமந்து சென்று தனது இறுதி மரியாதை செலுத்தினார். இவரது இந்த செயல் கூடியிருந்த மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Related Posts

Leave a Comment