மீண்டும் மார்ச்.1 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி!

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் தலைவர்கள் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம் வந்து மக்களை ஈர்த்துவருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர் அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த 14 ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் மார்ச் ஒன்றாம் தேதி மீண்டும் தமிழகம் வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது பிரதமர் மோடி அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக பிப்ரவரி 21ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலமும், பிப்ரவரி 19ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது.

Related Posts

Leave a Comment