பிரான்ஸ் இராணுவ விமானங்களை விரட்டியடித்த ரஷ்ய போர் விமானங்கள்!

by Lifestyle Editor
0 comment

கருங்கடல் வழியாக எல்லையை நெருங்கிய மூன்று பிரான்ஸ் இராணுவ விமானங்களை ரஷ்யா Su-27 போர் விமானங்கள் தடுத்து திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருங்கடல் வழியாக பிரான்ஸின் இரண்டு Mirage-2000 போர் விமானங்களும் மற்றும் கே.சி -135 எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்யா எல்லையை நெருங்கி வருவது கண்டறியப்பட்டது.

உடனே கண்காணிக்க ரஷ்யாவின் இரண்டு Su-27 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின்படி, பிரான்ஸ் விமானங்களை தடுத்த ரஷ்ய விமானங்கள் திருப்பி அனுப்பி வைத்தன.

பிரான்ஸ் விமானங்கள் எல்லையிலிருந்து திரும்பியதை அடுத்து, ரஷ்ய விமானங்கள் தளத்திற்கு திரும்பின.

ரஷ்யாவின் தேசிய எல்லையை மீறுவது அனுமதிக்கப்படாது என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment