பெண்கள் எப்படி இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது?

by Lifestyle Editor
0 comment

உலக மககளின் பெரும்பாலான செயல்காடுகளும் இணையவழியாகவே நடந்தன. அதே நேரத்தில் இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. பல பெண்கள் இணையவழி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். வளர்ந்து வரும் இணைய தொழில் நுட்பத்திலும், மொபைல் சாதனங்களின் பயன்பாட்டிலும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

பாஸ்வேர்ட் எனும் கடவுச்சொற்களை எக்காரணம் கொண்டும் யாருடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கடவுச்சொற்களை நண்பர்கள், உறவினர்கள், நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது தற்செயலாகவோ அல்லது தெரிந்தோ அவை தவறாக பயன்படுத்தப்படலாம்.

வெப் கேமரா மூலமாக உங்களுக்கே தெரியாமல் உங்களை கண்காணிக்கும் திறன் கொண்ட செயலிகள் பல உள்ளன. எனவே கணினி, லேப்டாப்போன்றவற்றில் கேமராவின் பயன்பாடுகள் முடிந்த பிறகு கேமராவை பயன்படுத்தக்கூடிய செயலிகளுக்கு கேமரா அனுமதியை முடக்கி விடவும். பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் கேமராவின் லென்சை மூடிவைக்கவும்.

நெருக்கமானவர்களுடன் எடுத்துக்கொண்ட படங்கள் செய்திகள் போன்றவறை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இணையத்தின் வழியாக உங்களுக்கு அறிமுகமானவர்களை, மக்கள் இல்லாத இடங்களில் தனியாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களை பற்றி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே அவர்களை சந்திக்க வேண்டும்.

கணினி டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்றவற்றில் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனால் தேவையற்ற மென்பொருட்கள் நமது தகவல்களை திருடுவதைத்தடுக்கலாம்.

இலவசமாக கிடைக்கிறது என்று எல்லாமென்பொருட்களையும் உங்கள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டாம். இதனால் வைரஸ், ஸ்பைவேர் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் உங்கள் சாதனங்களில் நுழைய நேரிடும்.

சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பட்டியலை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். விரும்பத்தகாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும்.

Related Posts

Leave a Comment