தினமும் ஒரு கையளவு இதை சாப்பிடுங்க போதும்… இதய பிரச்சனையே வராதாம்!

by Lifestyle Editor
0 comment

பொதுவாக அன்றாட உணவில் நட்ஸ்களை சேர்ப்பதன் மூலம், அவற்றில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் நட்ஸ்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களின் அளவு மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. இதனால் பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் தடுக்கப்படுகிறது.

அந்தவகையில் நட்ஸ்களில் எந்த நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதைக் காண்போம்.

  • பிஸ்தாவில் கலோரிகள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆகவே மாலை வேளையில் பசி எடுக்கும் போது கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடாமல், ஆரோக்கியமான பிஸ்தாவை ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் பசியும் அடங்கும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பாதாமை அன்றாட உணவில் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
  • வேர்க்கடலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆகவே வேர்க்கடலை பிடிக்கும் என்பவர்கள், இதை தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.
  • பூசணி விதைகள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. இதய நோய்கள் ஒருவருக்கு வருவதற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் என்பதால், மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.
  • ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் திறன் கொண்டவை. அதற்கு ஆளி விதைகளை பொடி வடிவில் உட்கொள்ள வேண்டும். இதனால் அவை எளிதில் ஜீரணிக்கப்படுவதோடு, அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சவும் முடியும்.
  • சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்க இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

Related Posts

Leave a Comment