காற்றிலேயே கர்ப்பமாகி குழந்தை பெற்ற அதிசய பெண்.. அதிர்ந்துபோன கிராம மக்கள்; எப்படி சாத்தியம்?

by Lifestyle Editor
0 comment

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சியாஜூர் எனும் நகரத்தில் வசிப்பவர் சிதி ஜைனா(25).

இவர் கடந்த நாட்களுக்கு முன்பு இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு வந்த அமர்ந்திருந்த போது தனக்கு ஒரு அதிசயம் ஏற்பட்டதாகவும், அப்போது காற்றினால் தான் கர்ப்பம் அடைந்தேன் எனவும் தெரிவித்ததுடன் அன்றைய தினமே பெண் குழந்தைக்கும் அவர் தாயார் ஆகியிருக்கிறார்.

இது எப்படி சாத்தியம் ஆகும் என அனைவரும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் குறித்த சிதி ஜைனாவே தெரிவித்துள்ளார்.

அதில், ”கடந்த நாள் புதன் கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்து விட்டு வீட்டின் வரவேற்பறையின் தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்தேன்.

அப்போது திடீரென்று என் யோனி (பெண்ணின் பிறப்பு உறுப்பு) வழியாக காற்று என் உடலில் நுழைவதை உணர்ந்தேன். நான் இருந்த அறையில் பலமாக காற்று வீசியது.

காற்று வீசிய 15 நிமிடங்கள் கழித்து என் வயிற்றில் வலி ஏற்பட்டது. அதன் பின்னர் தான் எனது வயிற்றினுள் ஏதோ பெரியதாக இருப்பதை உணர்ந்தேன்.

இதனையடுத்து, அன்றைய தினமே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தைக்கு தாய் ஆகியுள்ளேன், என் கர்ப்பத்திற்கு காரணம் உறவு இல்லை” என சிதி ஜைனா கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே, சிதி ஜைனா கூறிய இந்த தகவல் மிகவும் ஆச்சரியம் தரும் விதமாகவும், விநோதமாகவும் இருந்ததால் அருகில் உள்ள பகுதிவாசிகளுக்கு இந்த தகவல் தீயாய் பரவியது. இது காவல்துறை அதிகாரிகளுக்கும் சென்றது.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன சிதி ஜைனாவுக்கு அவருடைய முன்னாள் கணவர் மூலமாக ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வரும் போலீசார் சிதி ஜைனாவின் முன்னாள் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதனால், திருமணத்திற்கு வெளியே ஏற்பட்ட உறவின் காரணமாக உருவாகிய குழந்தை குறித்து ஜைனா மறைத்திருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் இது மத கோட்பாடுகளை சார்ந்துள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை பிறப்பு தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், தாயும், குழந்தையும் சுகமாக உள்ளனர்.

ஜைனாவின் கர்ப்பத்தைச் சுற்றியுள்ள மர்மம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தாலும், இது ரகசிய கர்ப்பத்தின் ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related Posts

Leave a Comment