தண்ணீரும் மின்சாரமும் இன்றி தவிக்கும் டெக்சாஸ்: பனிப்புயலால் நிலைகுலைந்துள்ள டெக்சாசுக்கு ஸ்வீடன் அளித்துள்ள ஆலோசனை

by Lifestyle Editor
0 comment

பனிப்புயலால் நிலைகுலைந்துள்ள டெக்சாசுக்கு ஸ்வீடன் பயனுள்ள ஆலோசனை ஒன்றை அளித்துள்ளது.

அமெரிக்காவின் ஆற்றல் மையம் என அழைக்கப்படும் டெக்சாசே இன்று மின்சாரம் இன்றி தவிக்கிறது.

கழிவறையில் பயன்படுத்த தண்ணீரும் வெப்பப்படுத்த கருவிகளும் இல்லாததால், மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். டெக்சாசின் 10,700 காற்றாலைகளும் பனியில் உறைந்து கிடக்கின்றன.

எட்டு ஆண்டுகளுக்குமுன் டெக்சாசில் காற்றாலைகள் நிர்மாணிக்கப்பக்கட்டபோது, டெக்சாசின் மிதமான வெப்பநிலை காரணமாக, பனியைத் தாக்குப்பிடிப்பதற்கான அமைப்புகள் எதுவும் மின் விசிறிகளுடன் இணைக்கப்படவில்லை.

ஆனால், இப்போது எதிர்பாராமல் வீசியடித்த இந்த பனிப்புயல் டெக்சாசின் வெப்பநிலையையே மாற்றிவிட்டதால், காற்றாலைகளில் உள்ள இராட்சத மின் விசிறிகள் பனியில் உறைந்துபோய், இயங்காமல் கிடக்கின்றன.

இந்நிலையில் ஸ்வீடன் அமெரிக்காவுக்கு பயனுள்ள ஆலோசனை ஒன்றை அளித்துள்ளது. கடும் பனியை எதிர்கொள்ளும் ஸ்வீடனில் உள்ள காற்றாலைகள், குளிரையும் பனியையும் எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, காற்றாலைகள் விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஸ்வீடன், அமெரிக்க காற்றாலைகளில் கார்பன் பைபர் மற்றும் வெப்பநிலையை உணர்ந்து அதற்கேற்ப செயலாற்றும் சென்சார்களை இணைக்க அமெரிக்காவுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

அப்படி செய்தால், கடும் பனியிலும் காற்றாலைகளை இயக்கமுடியும் என்றும், இப்போது ஏற்பட்டுள்ளதுபோல் நாடே இருளில் மூழ்கும் நிலையைத் தவிர்க்கலாம் என்றும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

அத்துடன், இப்போது கார்பன் பைபர்களை இணைப்பது மூலம், செயலிழந்துள்ள காற்றாலைகளை மீண்டும் இயக்கலாம் என்றும் ஸ்வீடன் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment