இளவரசர் ஹரிக்கு பிரித்தானியா மகாராணியார் அவசர அழைப்பு: பின்னணியில் இருக்கும் காரணம்…

by Lifestyle Editor
0 comment

இளவரசர் ஹரிக்கு பிரித்தானியா மகாராணியார் அவசர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து மார்ச் 31உடன் ஓராண்டு ஆக உள்ள நிலையில், மகாராணியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது ஹரி மற்றும் மேகன் வகிக்கும் கௌரவ பட்டங்களை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹரி வகித்த பொறுப்புகள் இளவரசர் வில்லியமிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தான் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறும்பட்சத்தில், தனது இராணுவ பட்டங்களும் பறிபோய்விடும் என்பது குறித்து ஹரி வருந்தியதாகவும், அதை மட்டும் அவர் இழக்க விரும்பவில்லை என்றும் முன்பு ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

கடற்படையில் Royal Marines என்ற பிரிவின் கேப்டன் ஜெனரல், விமானப்படையின் கௌரவ தளபதி, சிறு கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் தலைமை தளபதி என பல பட்டங்களை வகித்துவந்தார் இளவரசர் ஹரி.

அவை எல்லாமே அவர் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவதால் பறிக்கப்பட்டுவிடும்.

அதே நேரத்தில், 10 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியதன் மூலம் ஹரி பெற்ற பட்டங்கள் அவரை விட்டு எப்போதுமே போகாது.

இதற்கிடையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மார்ச் 7ஆம் திகதி நடக்கவிருக்கும் ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டியின்போது, ஹரியும் மேகனும் ராஜ குடும்ப மரபுகளுக்கு எந்த விதத்திலும் களங்க ஏற்படாதபடி நடந்துகொள்வார்கள் என மகாராணியார் நம்புவதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment