திருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண்! அவரின் 15 வயது சகோதரிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய மணமகன்.. தலைசுற்றவைக்கும் சம்பவம்

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் திருமண நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவரின் 15 வயது தங்கையை மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தின் கலாஹாண்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு இளைஞன் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடக்கவிருந்தது.

திருமண சடங்கு தொடங்கவிருந்த சில மணி நேரத்துக்கு முன்னர் ஆண் ஒருவருடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் மணமகன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஓடிபோன மணப்பெண்ணின் குடும்பத்தார் ஒரு அதிரடியான முடிவை எடுத்தனர்.

அதன்படி மணப்பெண்ணின் 15 வயது சகோதரியை மணமகனுக்கு அதே முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

மைனர் பெண்ணை திருமணம் செய்து வைத்தது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் பொலிசார் கூறுகையில், சிறுமி தனது பெற்றோர் வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்கலாம்.

அவருக்கு 18 வயது ஆன பின்னரே கணவர் மற்றும் குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கப்படுவாள் என கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment