நகைச்சுவைக்காக பிரித்தானிய மொழியைக் கிண்டலடித்த நபருக்கு நேர்ந்த கதி!

by Lifestyle Editor
0 comment

வெல்ஷ் மொழியை ‘ஜிபரிஷ்’ என கிண்டலடித்து தனது வலைதள Blog-ல் பதிவிட்ட பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேல்ஸ் பகுதியை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பிரபலமான Iceland சூப்பர்மார்கெட் நிறுவனம், பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது.

அந்நிறுவனத்தில், கார்ப்பரேட் விவகார இயக்குநராக பதிவை வகிக்கும் Keith Hann (66) வருடத்துக்கு 102,000 பவுண்ட் சம்பளத்தில் பணியாற்றிவந்தார்.

அவர் வெல்ஷ் மொழியை ‘ஜிபரிஷ்’ என்றும் “அது ஒரு உயிரற்ற மொழி, அதை பேசுபவர்கள் கொப்பளித்து துப்புவது போன்று இருக்கும்” என்றும் கடுமையாக கிண்டலடித்து தனது சொந்த வலைத்தள Blog-ல் எழுதி பதிவிட்டுள்ளார்.

இதனால், சமூக வலைத்தலங்களில் வெல்ஷ் மக்களிடையே கடும் கோபத்தை தூண்டியது.

மேலும், வெல்ஷ் மக்கள் Iceland சூப்பர்மார்கெட் நிறுவனத்தை புறக்கணிக்கட் தொடங்கினர்.

நிலைமை மோசமடைந்தபோது, Hann தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவைக்காக இப்படி எழுதியதாக Keith Hann கூறினார். அதற்காக அவர் மேலும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதனையடுத்து Iceland நிறுவனம், வெல்ஷ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், மேலும் Keith Hann-ஐ பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

வெல்ஷ் மொழி வேல்ஸ் மட்டுமின்றி பிரித்தானியாவின் பல பகுதிகளில் பேசப்பட்டுவருகிறது.

Related Posts

Leave a Comment