ஆஞ்சநேயர் மாலா மந்திரம்!

by Lifestyle Editor
0 comment

ராமாயணப் போரில் ஶ்ரீராமரை போரில் வெற்றி பெற முடியாது என்று நினைத்த ராவணன் மயில் ராவணன் என்ற அசுரன் மூலம் ராமரை அழிக்கத் திட்டமிட்டான். ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க மயில் ராவணனும் ராம, லட்சுமணனைக் கொல்ல யாகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டான். இதை அறிந்த விபீஷணன், இந்த யாகம் நடந்தால் ராமர், லட்சுமணன் உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமரிடம் கேட்டுக் கொண்டார்.

ராமரும் ஆஞ்சநேயரிடம் இதைக் கூறி, யாகத்தைத் தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டார். நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகியோரின் ஆசி வேண்டினார் ஆஞ்சநேயர். அவர்கள் தங்கள் சக்தியை ஆஞ்சநேயருக்கு வழங்கினர். அவரும் பஞ்சமுக விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை வதம் செய்தார்.

பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கிவந்தால் இன்னல்கள் நீங்கும். நம்மைப் பிடித்த பிணி, பீடை, கெட்ட கனவு உள்ளிட்டவை நீங்கும்.

மந்திரம்:

ஓம் ராமதூதாய ஆஞ்சனேயாய

வாயு புத்ராய மகா பலாய

சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய

மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய

கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய

சப்த சமுத்ர நிராலங்கிதாய,

பிங்கள நயனாய அமித விக்ரமாய

சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய

சஞ்சீவினி சமாநயன

சமார்த்தாய அங்கதலட்சுமண

கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

தசகண்ட வித்வம்ஸனாய

ராமேஷ்டாய பல்குணசகாய

சீதா சகித இராமச்சந்திர

ப்ராசதகாய –ட் ப்ரயோகாங்க

பஞ்சமுக ஹனுமதே நம

இந்த மந்திரத்தை காலை அல்லது மாலையில் எட்டு முறை சொல்லி ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு நல்லதே நடக்கும்!

Related Posts

Leave a Comment