உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோவில் புதன்கிழமை 13 வயது முதல் 16 வயதான மூன்று சிறுமிகள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். மூன்று சிறுமிகளில் இருவர் இறந்து கிடந்தனர், ஒருவர் காயமடைந்து மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவா பகுதியில் அசோகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமையன்று13 வயது முதல் 16 வயதான மூன்று சிறுமிகள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தார்கள் .அதன் பேரில் போலீசார் அந்த காட்டுக்குள் விரைந்து சென்று அந்த மூன்று சிறுமிகளை மீட்டு பரிசோதனை செய்தார்கள் .அப்போது அதில் இரண்டு சிறுமிகள் இறந்து கிடந்தனர்,ஒரு சிறுமி மட்டும் மயக்க நிலையில் இருந்தார் .அதனால் அவரை உடனே அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றார்கள் .அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்கள் .மேலும் அவர் மயக்க நிலையில் இருப்பதால் அவருக்கு மயக்கம் தெளிய வைக்க தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது .அந்த சிறுமியின் மூளையில் பாதிப்பு இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கிறார் . இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து கூறுகையில் ,மயக்க நிலையிலிருக்கும் ஒரு சிறுமிக்கு நினைவு திரும்பினால்தான் இந்த இறப்புக்கான காரணம் தெரியவருமென்றார்கள் .
இந்நிலையில் அவரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்களுக்கு அந்த சிறுமிகளை கொலை செய்யுமளவுக்கு எதிரிகள் யாருமில்லையென்றும் ,எவர் மீதும் சந்தேகமில்லையென்றும் கூறினார்கள் . இறந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களா என்று கண்டறிய போலீசார் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள் .இந்த கொலை பற்றி ஆறு தனிப்படை அமைத்து விசாரிக்கிறார்கள்.