மல்லுக்கட்டிய சிஎஸ்கே-ஆர்சிபி… மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஏலம்!

by Lifestyle Editor
0 comment

இன்று ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக நகர்ந்தது ஏலம். மேக்ஸ்வெல் குறித்த அறிவிப்பு வந்ததும் ஏலத்தில் சூடு பிடித்தது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பெரிய விலைக்கு ஏலத்திற்குப் போனாலும் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்த்தை வெளிப்படுத்துவது கிடையாது. கடந்த தொடரிலும் அதே தான் நடந்தது. இருப்பினும், இந்த முறையும் அவரை வாங்க ஒவ்வொரு அணிக்கிடையிலும் கடும் போட்டி நிலவியது.

ஆரம்பத்தில் கொல்கத்தாவும் ஆர்சிபியும் ராஜஸ்தானும் களமிறங்கின. பின்னர் ஆர்சிபியை தவிர்த்து மற்ற இரண்டு அணிகளும் விலகிக்கொண்டன. உடனே ஆர்சிபியுடன் சிஎஸ்கே இணைந்துகொண்டது. இரு அணிகளும் மேக்ஸ்வெல்லை எடுக்க முட்டி மோதிக்கொண்டன. மாறி மாறி கையை உயர்த்தி மேக்ஸ்வெல்லின் விலை ரூ.14 கோடிக்குச் சென்றது. இறுதியாக சிஎஸ்கே விட்டுக்கொடுத்ததை அடுத்து ஆர்சிபி அணி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த முறை பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment