கஸ்தூரி ராஜா கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்?

by Lifestyle Editor
0 comment

இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பைனான்ஸியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை தன்னால் திருப்பி தர இயலாது போனால், தனது கடனை நடிகர் ரஜினி திருப்பி தருவார் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா கடிதம் எழுதி கொடுத்தார். இந்த வழக்கில் முகுந்த் சந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, கஸ்தூரி ராஜா வாங்கிய கடனை ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட கோரினார்.

நீண்டகாலம் நடந்து வரும் இந்த வழக்கில், ’’தனது கடனைநடிகர் ரஜினி திருப்பி தருவார் என்று கஸ்தூரி ராஜா எழுதிக்கொடுத்தது ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்’’ என்று இன்று கேள்வி எழுப்பி இருக்கிறது உயர்நீதிமன்றம்.

Related Posts

Leave a Comment