25 ஆண்டுக்கு முன் அம்மன் படத்தில் நடித்தை குழந்தையா இவங்க? கணவர் மற்றும் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் பாருங்க!

by News Editor
0 comment

தெலுங்கில் 1995-ம் ஆண்டு வெளியாகி அம்மொரு என்ற படத்தின் தமிழ் டப்பிங் ஆக வெளியான திரைப்படம் தான் அம்மன்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழிலும் படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

அமானுஷ்யம், கிராபிக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அம்மன் திரைப்படம் மிகப்பெரிய லாபம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் சௌந்தர்யா, நடிகர் சுரேஷ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதையடுத்து, வடிவுக்கரசி, ராமி ரெடி போன்றோரின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது.

மேலும், அம்மனாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருப்பார். ஆனால் இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர் என்றால் குழந்தை அம்மனாக நடித்த சுனைனா என்ற குழந்தை நட்சத்திரம் தான்.

இவரின், அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் அசர அடித்திருப்பார். தற்போது திருமணம் செய்து செட்டிலாகி உள்ள சுனைனா அவ்வப்போது வெப்சீரீஸ், படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது 32 வயதான சுனைனா இப்போதும் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அழகாக உள்ளார்.

அம்மன் படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடங்களிலேயே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

சுனைனாவின் தற்போதைய புகைப்படம்தான் இணையதளங்களில் இன்றைய ட்ரெண்டிங்.

Related Posts

Leave a Comment