இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 13பேர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13பேர் நேற்று(17) உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில்,  நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவான 13 மரணங்களில், 12 பேர் ஆண்கள் என்பதுடன், பெண் ஒருவரின் மரணமும் பதிவாகியுள்ளது. ஆறு பேரின் மரணங்கள் தங்களது வீடுகளில் பதிவாகியுள்ளன.

களுத்துறையில் மூவர், நுவரெலியா, அக்கரப்பத்தனை, பேலியகொடை, போம்புவல, நாபொட, மக்கொண, கம்பளை, பாணந்துறை, வேவுட, நுகேகொடை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்று மற்றும் சிறுநீரக நோய் நிலைமை, தீவிர மூச்சிழுப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய், நிமோனியா, இதய நோய், உயர் குருதி அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், குருதி நஞ்சானமை என்பன இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்திலேயே இலங்கையில் நாளொன்றில் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Comment