நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம்!

by Lifestyle Editor
0 comment

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனிடையே டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க தடுப்புகள், முள் வேலிகள், முள் பலகைகள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளில் டெல்லி போலீஸ் ஈடுபட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாளை காலை12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி., மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ரயில்கள் சில ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்பங்காவில் இருந்து அமிர்தசரஸ் கிளம்பும் தர்பங்கா – அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் (05211) மற்றும் பிப்.17ம் தேதி அமிர்தசரஸிலிருந்து தர்பங்கா திரும்பும் அமிர்தசரஸ்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் (05212) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment