தினமும் 10 கருவேப்பிலை சாப்பிட்டால் போதும்.. இத்தனை நோய்களுக்கு மருந்தாகும் அதிசயம்!

by Lifestyle Editor
0 comment

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.

மேலும், தினமும் 10 கறிவேப்பிலை இலையினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.

அனைவரது வீடுகளிலும் எளிமையான முறையில் கறிவேப்பில்லை கிடைக்கும். கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது.

இதையடுத்து, கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் 10 கறிவேப்பிலையினை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் கறிவேப்பிலை உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. இனி உடல் பருமனுடன் இருப்பவர்கள் கவலை பட வேண்டாம்.

Related Posts

Leave a Comment