இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!

by Lifestyle Editor
0 comment

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 2-1 என கைப்பற்றினால் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை 3-1 என வென்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதற்கு மீதமள்ள இரண்டு போட்டியிலும் அந்த அணி வெற்றிப்பெற வேண்டும்.

அதே சமயம், நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், அவுஸ்திரேலியா அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அதுமட்டுமில்லாமல், 1-1 அல்லது 2-2 என இந்தியா-இங்கிலாந்து தொடர் சமனில் முடிந்தாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய தகுதி பெறும்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24ம் திகதி அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய டெஸ்ட அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகிர் சர்மா, மயங்க அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

உடற்தகுதி மதிப்பீட்டிற்குப் பிறகு விஜய் ஹசாரே டிராபிக்காக விடுவிக்கப்படும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அகமதாபாத்தில் இந்திய அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருவரும் 3வது மற்றும் 4வது போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment