நடிகர் சூரி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூரியும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “ரசிப்பவர் மனதை கொள்ளையடிக்கும் என் அன்பு தம்பி டான்னுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனும் சூரியும் நண்பர்கள் என்பதற்கும் மேலாக உண்மையான அண்ணன் தம்பியாக பழகி வருவது அனைவர்க்கும் தெரிந்ததே! மனம் கொத்திப் பறவை படத்தின் ஆரம்பித்த இந்தக் கூட்டணி கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை வரை தொடர்ந்தது. இவர்கள் கம்போவில் காமெடி கலக்கலாக இருக்கும். இந்தக் கூட்டணி இடம் பெற்றாலே படம் பாதி வெற்றி என்று கோலிவுட்டில் நம்பிக்கை இருக்கிறது. தற்போது சூரி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது கவனம் பெற்று வருகிறது.
சூரி தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்திலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.