மகனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

by Lifestyle Editor
0 comment

வேலூர் அருகே குடும்பத் தகராறில் மகனை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி(50). ராணுவ வீரராக பணியாற்றிய இவர், அப்பணியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவர் தனது மகளை திட்டியிருக்கிறார்.

இதை அவரது இளைய மகன் வினோத் (25) தட்டிக் கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியால் வினோத்தை சுட்டுள்ளார். நெஞ்சில் குண்டு பாய்ந்ததில், வினோத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். வினோத் உயிரிழந்ததை தெரிந்து கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆன சுப்பிரமணி போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை வலைவீசி தேடி வந்தனர். சுப்பிரமணி அடுக்கம்பாறை பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்துக்கு சென்ற போலீசார், சுப்பிரமணியை வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment