மேலாடையில்லாத மேனியில் விநாயகர் டாலர் ; பாடகி ரிஹானாவால் கொந்தளிக்கும் பாஜக

by News Editor
0 comment

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டதால் உலகத்தின் கவனம்பெற்றது. ரிஹானாவை தொடர்ந்து சர்வதேச சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்து கருத்து பதிவிட்டார்.

ரிஹானாவின் பதிவுக்கு பின்னர்தான் விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம்பெற்று, அதனால் இந்தியாவுக்கு பெரும் சிக்கலாகி, பின்னர் சமாளித்ததுஅரசு.

விவசாயிகளின் போராட்டத்தினை உலக அளவில் எடுத்துச்சென்றதால் பாடகி ரிஹானாவுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும், இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் அவர் மேலாடை இல்லாத மேனியில் விநாயகர் டாலரை தொங்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.

இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரிஹானா, ‘’ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றி…’’என்றும் பதிவிட்டிருக்கிறார்.

அது ஒரு விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட போஸ் என்று சொல்லப்பட்டாலும், இந்த நேரத்தில் அப்படம் வெளிவந்திருப்பது, இந்துக்களையும், பாஜகவினரையும் புண்படுத்தும் நோக்கில் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பதாக பாஜகவினர் பலரும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவினர் மற்றும் விஷ்வ இந்து பரிஷர் தரப்பினர் மும்பை போலீசில் ரிஹானா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment