இளவரசர் ஹரி- மேகன் கொடுக்கப்போகும் அந்த பேட்டி; கலக்கத்தில் அரச குடும்பம்

by News Editor
0 comment

என் திருமண வாழ்வில் நாங்கள் இரண்டு பேர் இல்லை, மூன்று பேர் இருந்தோம் என பிபிசி தொலைக்காட்சியில் இளவரசி டயானா அளித்த ஒரு பேட்டி, இன்றுவரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன் கணவர் இளவரசர் சார்லஸ், தனது முன்னாள் காதலியான கமீலா பார்க்கருடன் தொடர்பிலிருப்பதைத்தான் டயானா அப்படி குறிப்பிட்டிருந்தார்.

1995ஆம் ஆண்டு, அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்த விடயங்களால் உலகமே பரபரப்படைந்தது. ராஜ அரண்மனை பதறியது. சார்லசும் டயானாவும் விவாகரத்து செய்துகொள்ளும்படி கோரினார் மகாராணியார்.

அப்படி இளவரசி டயானா கொடுத்த பேட்டியைப்போல், இப்போது அவரது மகனான ஹரியும், அவரது மனைவியான மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில், பிரபல டாக் ஷோ நடத்தும் ஓபரா வின்ஃப்ரேயுடன் பேட்டி ஒன்றைக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறிவிட்டதால், அவர்கள் எந்த நிகழ்ச்சிகளில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அரண்மனை தெரிவித்துள்ளதாக அரண்மனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், உலகம் முழுவதிலுமுள்ள பல மில்லியன் பேர் பார்க்க இருக்கும் அந்த பேட்டியில், டயானா சொன்னதுபோல், ஹரியும் மேகனும் என்ன சொல்ல இருக்கிறார்களோ என்ற பதற்றம் அரண்மனையில் நிலவுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது!

Related Posts

Leave a Comment