மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது

by Lankan Editor
0 comment

மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.

இதனை அடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை விடுவிக்குமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், மியன்மாரில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் வன்முறையை தூண்டியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகி தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts

Leave a Comment