யாழில் புராதனமான பொக்கணைக் கிணற்றின் சிறப்பு

by Lankan Editor
0 comment

நிலாவரையைப் போல் யாழ்ப்பாணத்திலுள்ள வற்றாத ஊரெழு பொக்கணைக் கிணறு. இக்கிணற்றுக்கும் கீரிமலையுடன் தொடர்புள்ளது. இங்கும் தேசிக்காயினை போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்குமாம்.

ஆனால் நிலாவாரைக்கும் இதற்கும் உள்ள பாரிய வித்தியாசம் கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணையானது தண்ணீரை வெளியில் தள்ளி இதனால் அக்கிராமமே வெள்ளத்தில் மூழ்கிவிடும். கால்நடைகள் , விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்துவிடுமாம். இவ்வாறு பலதடவைகள் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இப்போது சுற்றிவர மதில் இருக்கின்றது. தேசிய நீர் வடிகால் அமைப்பு பொக்கணையை புனரமைத்து நீர் இங்கிருந்து மானிப்பாய், கந்தரோடை போன்ற பல இடங்களிற்கு நீர் விநியோகிக்கின்றார்கள்.

கர்ண பரம்பரைக்கதை -இலங்கையில் இராவணனுடன் யுத்தம் நிறைவடைந்து திரும்பும் போது இராமர் நிலாவாரையிலும், சீதை பொக்கணையிலும் தாகத்தை தணித்துக் கொண்டனராம். இராமர் பாதமும் இருப்பதாக சொன்னார்கள்.

Related Posts

Leave a Comment