கொரோனாவிற்கு சிறந்த மருந்து…. தாயும், குழந்தையும் 4 நாட்களாக சிறுநீரை குடித்த அவலம்! வாட்ஸ்அப் காணொளியால் ஏற்பட்ட துயரம்

by News Editor
0 comment

கொரோனா குணமாக வேண்டும் என்றால் சிறுநீரை குடிக்க வேண்டும் என்று உறவினர்கள் அனுப்பிய காணொளியினை அவதானித்து தாயும், மகனும் சிறுநீரைக் குடித்த சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கையில், பல லட்சம் மக்களின் உயிரையும் பறித்து வருகின்றது.

இதற்காக மக்கள் கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு சில வீட்டு வைத்தியங்களை செய்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரை, ஆவி பிடித்தல், மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து கஷாயம் போட்டு அருந்தி வருகின்றனர்.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது. மேலும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் வீட்டு வைத்தியம் எந்தவொரு பக்கவிளையினையும் ஏற்படுத்துவது இல்லை.

ஆனால் மற்ற நாடுகளில் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் போலியாக பரப்பப்படும் தகவல்களுக்கு மக்கள் இரையாகி வருகின்றனர்.

கொரோனாவிற்கு தடுப்பூசிகள் வந்துவிட்டாலும், இம்மாதிரியான போலிகளை நம்பி மக்கள் சில காரியங்களை செய்து வருகின்றனர் என்று லண்டனில் ஹெல்த் வாட்ச் வெஸ்ட்-க்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களின் விசாரணையில், தாய் மகன் இருவரும் கொரோனாவை சரிசெய்வதற்கு நான்கு நாட்கள் தொடர்ந்து சொந்த சிறுநீரை குடித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களை இவ்வாறு செய்வதற்கு அறிவுறுத்தியது இவர்களின் உறவினர் ஒருவர் வாட்ஸ்ஆப்பிற்கு கொடுத்த காணொளியினை வைத்து இவ்வாறு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

Related Posts

Leave a Comment