கணவனை விட்டு பிரிந்ததால் பெண்ணுக்கு கொடுத்த கொடூர தண்டனை!

by Lifestyle Editor
0 comment

கணவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் அந்த பெண்ணை கணவன் வீட்டைச் சேர்ந்தவர்கள் பிடித்து வந்து கொடூர தண்டனையை கொடுத்துள்ளனர்.

கணவன் வீட்டை சேர்ந்த ஒருவரை அந்தப்பெண்ணின் தோளில் உட்கார வைத்து சுமந்து செல்லும்படி கூறியுள்ளனர். கொஞ்சம் தூரமல்ல; 3 கிலோமீட்டர் இப்படியே அந்தப்பெண்ணை எங்கேயேயும் நிற்க விடாமல் தூக்கிச்செல்லும்படி செய்துள்ளனர்.

அந்தப்பெண்ணும் தள்ளாடியபடியே கண்ணீர் விட்டபடியே மூச்சிறைக்க தூக்கிசென்றிருக்கிறார்.

அந்தப்பெண் கஷ்டப்பட்டு தூக்கிச்செல்லும்போது, சில கிரிக்கெட் மட்டைகளுடன் கேலி செய்தபடியே அந்தப்பெண்ணுடன் ஓடுகிறார்கள்.

இந்த கொடுமையினை அரகேற்றி, ஒரு ஊரே அந்தப்பெண்ணின் பின்னால் செல்கிறது.

மத்திய பிரசதேசத்தில் நடந்த இந்த கொடூரம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிற சாதி பையனை காதலித்ததால் அந்த பையனையே தூக்கிச்சுமந்து செல்லும்படியான அவலத்தினையும் முன்னர் நிறைவேற்றி இருந்தனர் வடமாநிலத்தில். இப்போது இப்படி ஒரு கொடூரம். இவர்கள் திருந்தவே மாட்டார்களா? என்றே கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Posts

Leave a Comment