பிரித்தானிய பொதுமுடக்கம் தொடர்பில் பிரதமர் அறிவிக்க இருக்கும் மூன்று பெரிய மாற்றங்கள்: அவை என்னென்ன? எப்போது அறிவிக்கப்படும்?

by Lifestyle Editor
0 comment

பிரித்தானிய பொதுமுடக்கம் தொடர்பில் இம்மாதம் (பிப்ரவரி)22ஆம் திகதி, பிரித்தானிய பிரதமர் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை என்னென்ன?

சுற்றுலா (picnic)

நாடு சகஜ நிலைக்கு திரும்பும் நடைமுறையின் ஒரு பகுதியாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்கள் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வெளியிடங்களில் பிக்னிக் போன்ற காரணங்களுக்காக, பொழுதுபோக்குக்காக சந்திக்கலாம் என அறிவிக்க இருப்பதாக தெரிகிறது.

இப்போதைக்கு, உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே ஒருவர் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவரை வெளியிடங்களில் சந்திக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.

வெளியிடங்களில் விளையாட்டுகள் / உடற்பயிற்சி
டென்னிஸ் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் இப்போதைக்கு மூடப்பட்டுள்ளன. ஆனால், அடுத்த மாதம் வாக்கில் இது மாறலாம்.

மக்கள் வெளியிடங்களில் விளையாடும் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கப்படலாம். அடுத்த வாரம், பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதுகாப்பாக பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்வது தொடர்பாக பேசுவதற்காக தனது கேபினட் மற்றும் அறிவியல் ஆலோசகர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பின், பிப்ரவரி 22ஆம் திகதி அவர் நாட்டு மக்கள் முன் உரையாற்ற இருக்கிறார்.

பள்ளிகள்

சென்ற மாதமே, போரிஸ் ஜான்சன், மார்ச் 8 வாக்கில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பேசியிருந்தார்.

நாடு சகஜ நிலைக்கு திரும்பும் முதல் நடவடிக்கையாகவே பள்ளிகள் திறப்பு இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர்கள் ஆசிரியர்கள் என இரண்டு கூட்டத்தினருக்குமே இருந்தது.

அதே நேரத்தில், பள்ளிகளைத் திறப்பது மீண்டும் ஒரு கொரோனா பரவலை ஏற்படுத்தலாம் என்றும், மருத்துவமனைகள் மீண்டும் அழுத்தத்திற்குள்ளாக்கப்படலாம் என்றும் சில மருத்துவத்துறை நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

Related Posts

Leave a Comment