மாமா.. மீண்டும் கதிர்- முல்லை ரொமான்ஸ்! பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி திருப்பங்கள்

by News Editor
0 comment

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பாரதி கண்ணம்மாவில் நடித்த காவ்யா புது முல்லையாக களமிறங்கினார்.

முதலில் காவ்யாவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், போகப்போக சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தி வருகிறார்.

இதில் ஜீவா- மீனா தம்பதிக்கு ஏற்கனவே குழந்தையிருக்கும் நிலையில், மூர்த்தி- தனம் தம்பதிக்கும் குழந்தை பிறக்கவுள்ளது.

இதனைதொடர்ந்து அதிகளவு ரசிகர்களை கொண்ட கதிர்- முல்லை ஜோடிக்கும் இடையே விரைவில் ரொமான்ஸ் காட்சிகள் தொடங்கவுள்ளதாம்.

இதை காவ்யாவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார், மாமா…. மாமா.. என கதிரை செல்லமாக அழைக்கும் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்கிறார்.

மேலும் இதற்கு முன்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தான் பார்த்ததில்லை என்றும், தன்னுடைய ஸ்டைலிலேயே நடிக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டதால் முல்லையாக நடிக்க ஒப்பந்தமானதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment