முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும்.
இதை போக்க பணம் செலவழித்து கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.
இதற்கு சில வீட்டுக் குறிப்புகளை உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
- சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
- சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
- சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
- சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
- கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.