108 ஆடுகள் வெட்டி கறி விருந்து வைத்த சீமான்! எதற்கு தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

by Lifestyle Editor
0 comment

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குல தெய்வ கோவிலில் 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து படைத்துள்ளார்.

குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தன் மகனான பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில், பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார்.

அதன் பின் அவர் கூறுகையில், விவசாயி மட்டும் தான், உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.

இந்த நிலை மாறாத வரை, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயிகள் மீண்டும் கடனாளியாகவே மாறுவர். சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி எட்டு கோடி தமிழர்களிடம் மட்டுமே, கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடைபோடும் என்று கூறினார்.

Related Posts

Leave a Comment