பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு… பொதுமுடக்கத்தை விலக்குவது குறித்து லண்டன் அறிவியலாளர் எச்சரிக்கை

by Lifestyle Editor
0 comment

பொதுமுடக்கம் சீக்கிரமாக விலக்கிக்கொள்ளப்படும் பட்சத்தில், பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா அலையால் கொல்லப்படுவார்கள் என லண்டன் அறிவியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளரான பேராசிரியர் Azra Ghani, நாட்டில் தடுப்பூசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையிலும்கூட, பொதுமுடக்கத்தை மொத்தமாக விலக்கிக்கொண்டால், 2021ஆம் ஆண்டின் கோடைக்காலத்தின்போது பல ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

அரசு, பிப்ரவரி 22 வாக்கில் பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்வது குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், பேராசிரியர் Azra Ghaniயின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

செப்டம்பரில் பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கும் வரையிலாவது கட்டுப்பாடுகளை நடைமுறையில் வைத்திருந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்கிறார் அவர்.

எனது ஆலோசனை என்னவென்றால், எச்சரிக்கையாக இருப்போம், மெதுவாக கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவோம், ஏனென்றால், மெதுவாக சற்று நீண்ட காலகட்டத்தில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதுதான் கொள்ளைநோயிலிருந்து வெளியேற சிறந்த வழியாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் Azra Ghani.

பிரச்சினை என்னவென்றால், இந்த வைரஸ் பயங்கரமாக பரவக்கூடியது. இப்போது புதிது புதிதாக திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் வேறு உருவாகின்றன, அவை, ஏற்கனவே இருக்கும் வைரஸ்களைவிட அதிகமாக பரவக்கூடியவை. அத்துடன், பல்வேறு காரணங்களால் எல்லோருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை.

ஆகவே, இப்படியிருக்கும் ஒரு சூழலில், ஒரேயடியாக கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டோமானால் அடுத்தடுத்து கொள்ளை நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

Related Posts

Leave a Comment