சனி மற்றும் குருவினால் ஏற்படும் பண கஷ்டங்கள்… இந்த ஒருபொருள் கையில் இருந்தால் போதும்

by Lifestyle Editor
0 comment

கருப்பு மஞ்சளை கையில் வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கருப்பு மஞ்சளை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.

நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும்.

சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.

பணத்தை எதிர்நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியிலும் பீரோவிலும் வைக்கலாம்.

கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குழைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.

Related Posts

Leave a Comment