ஓவியா மேலயே கை வச்சிட்டீங்ளா… ஆர்மி உங்கள சும்மா விடாது

by Lifestyle Editor
0 comment

பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன் தமிழகம் வந்தார். வழக்கம் போல நம்மாட்கள் #Gobackmodi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தார்கள். யாரும் எதிர்பாராவிதமாக ஓவியா இந்த ஹேஸ்டேக்கைப் பதிவிட்டார். இது தமிழக பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. உடனே அவருக்கு ஒரு தேசத்துரோகி பட்டத்தைப் பார்சல் செய்து அனுப்பினர். அவரின் பதிவுக்கு கீழ் மிகவும் கீழ்த்தரமாக வசைபாடினர். அதன்பின் சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவுக்கு ஒரு புகாரையும் அனுப்பினர். ஓவியாவைத் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினுடைய 21ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கரு. பழனியப்பன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தான் அவர், “ஓவியா #Gobackmodi என்று பதிவிட்டதற்கு பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போல. ஓவியாவிற்கென தனியா ஆர்மி இருக்கிறது. இவர்கள் ஓவியா ராணுவத்தின் மீது கை வைத்துள்ளனர். அவர்கள் சும்மா விட மாட்டார்கள்” என்று கலகலப்பாகப் பேசினார். அவர் கூறியது போல ஆர்மிக்காரர்கள் பாஜகவுக்கு எதிராகக் களமாடிவருகின்றனர்.

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவரின் நடவடிக்கைகள் பிடித்துப் போய் தமிழ்நாட்டு மக்கள் ஓவியாவுக்காக ஆர்மி ஆரம்பித்தார்கள். ஓவியாவுக்கு போட்ட ஓட்டை மக்கள் எனக்குப் போட்டிருக்கலாம் என அன்புமணி ராமதாஸ் கூறும் அளவுக்குத் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் ஆர்மிக்காரர்கள். ஓவியாவை யார் வம்பிழுத்தாலும் உடனே ஆஜராவார்கள். அவர்களை வகுந்தெடுத்த பின் தான் அடுத்த வேலையைவே கவனிப்பார்கள். தற்போது பாஜக வகைதொகையாகச் சிக்கியிருக்கிறது. சிக்கிச் சின்னாபின்னம் ஆகும் அளவுக்கு விட மாட்டார்கள்.

Related Posts

Leave a Comment