முதியோர் காப்பகத்தில் துளிர்ந்த காதல்… 65 வயது பாட்டியை கரம்பிடித்த 58 வயது நபர்

by News Editor
0 comment

காதலர் தினத்தன்று, கேரளாவில் உள்ள காப்பகம் ஒன்றில், முதியோர் இருவர் திருமணம் செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் காதலர் தினத்தன்று, அரங்கேறி உள்ள ருசிகர சம்பவம், காதலுக்கு மொழி, இனம், வயது என எதுவும் தடையாகிவிடாது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

திருச்சியை சேர்ந்த ராஜன்(58) என்பவர், சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

திருமணம் ஆகாத இவர், தனது வருவாயை, சொந்த ஊரில் உள்ள சகோதரிகளுக்கு வழங்கி, வாழ்ந்து வந்த நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இவரைப்போல், மண்ணடி பகுதியை சேர்ந்த, வாய் பேச இயலாத, சரஸ்வதி(65) என்பவரும், திருமணம் ஆகாமல், அரவணைப்பின்றி தவித்த நிலையில், அதே காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

காப்பகத்தில் ராஜனும் சரஸ்வதியும், அறிமுகமாகி நண்பர்களாக பழக ஆரம்பித்து, நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த காப்பக நிர்வாகிகள் காதலர் தினத்தன்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment