பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் Covid-19 தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன

by Lankan Editor
0 comment

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

பாராளுமன்றபடைக்கள சேவிதர் இதனை தெரிவித்துள்ளார்.  இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 224 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 192,938 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 3,589 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment