கொரோனா மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்

by Lankan Editor
0 comment

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் மரணங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இந்த வகையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த வயோதிப தம்பதிகளின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

டெரிக் மற்றும் மாக்கிரட் ஆகியோர் கடந்த 70 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு 91 வயது . நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அவர்களை கொரோனா நோய் தாக்கியது.

இருவருக்கும் ஏற்பட்ட கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து,  இறுதியில் அவர்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

இதனால் தான் இறக்கும் போது மனைவி அருகே இறக்க விரும்புவதாக டெரிக் கூறியுள்ளார்.இதனை அடுத்து அவரது மனைவி மாக்கிரட்டை அவர்கள் அருகில் உள்ள கட்டிலுக்கு மாற்றி இருந்தார்கள். இருவரும் கைகளை கோர்த்தபடி ஒரே நேரத்தில் உயிரிழந்து விட்டார்கள்.

இதனை நேரில் பார்த்த தாதி ஒருவர் மனம் உடைந்து கதறி அழுதுள்ளார். எத்தனை சாவை தான் நாங்கள் இனியும் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை என்று அவர் கண்கள் கலங்கி கூறிய காட்சிகள். பிரித்தானியாவில் உள்ள பலரின் மனங்களில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment