சித்ரா வழக்கில் நீதிபதி இந்த முடிவெடுக்க என்ன காரணம்?

by Lifestyle Editor
0 comment

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ம் தேதி அன்று சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சித்ராவின் மரண வழக்கு சென்றது சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது குடும்பத்தினர், ஓட்டல் மேலாளர்கள், ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் 5 கட்ட விசாரணை நடந்தது.

ஹேம்நாத், சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டியதால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ததால், ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து தனக்கு ஜாமீன்கோரி ஹேம்நாத் போராடி வந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது.

சித்ரா வழக்கில் ஹேம்நாத்துக்கு எப்படி ஜாமீன் கிடைத்தது என்று பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹேம்நாத் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் நீதிபதி இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment