அனிருத், கீர்த்தி சுரேஷ் இடையே காதலா? உண்மை என்ன!

by Lifestyle Editor
0 comment

சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக பல வதந்திகள் பரவின.

மேலும், இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பல செய்திகள் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் அனிருத் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதே இந்த வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.

அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் என இருதரப்பினரிடமும் விசாரித்த போது இது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள், அவரவர் வேலைகளில் மும்மரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு உடன் ‘சர்க்காரு வாரி பாட்டா‘ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் உடன் ‘சாணிக் காயிதம்‘ படத்திலும் நடித்து வருகிறார்.

மறுபுறம், அனிருத் நெல்சன் திலிப்குமார்- விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கவிருக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Related Posts

Leave a Comment