கணவரை பிரிந்து வாழ்ந்த வெண்பா! விவாகரத்து வரை சென்றதா? ரசிகர்களுக்கு சொன்ன ஷாக் தகவல்

by Lifestyle Editor
0 comment

பிரபல நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்த பரீனா ஆசாத், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா-வாக கலக்கி வருகிறார்.

இவருடைய கணவர் ரஹ்மான், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி, தன்னுடைய நிகழ்ச்சியின் எடிட்டராக பணிபுரிந்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது, மிக சந்தோஷமாக திருமண வாழ்வை தொடங்கினாலும், கருத்து வேறுபாட்டினால், இருவரும் பிரிந்து விட்டார்களாம்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர், இந்நேரத்தில் கூட கணவர் ஒருபோதும் தன்னை விட்டுக்கொடுத்ததில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பரீனா.

இருப்பினும் இந்த இடைவெளியே இருவருக்கும் இடையில் ஒரு புரிதலை உண்டாக்கியதாகவும், தற்போது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, கணவருடன் சேர்ந்து விட்டாரோ அதுவே போதும் என வாழ்த்துகின்றனர் பரீனாவின் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment