இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் அபார சதம்! இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அசத்தல்

by Lifestyle Editor
0 comment

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதம் விளாசியுள்ளார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கிய நிலையில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கில் சொற்ப ரன்களில் அவுட்டானர்கள்.

கேப்டன் கோஹ்லி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தியதோடு 134 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.

இதில் 14 பவுண்டரிகள், 1 சிக்சர் அடக்கமாகும். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அடிக்கும் 5வது சதமாகும்.

இதையடுத்து அஸ்வின் 106 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் மற்றும் மொயின் அலி தலா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment